மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 00:00 IST
கும்பகோணம் காமராஜ் நகரில் உள்ள விஸ்வரூப ஜெயமாருதி ஆஞ்சநேயர் கோயிலில் பங்குனி அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. அனைத்து உயிர்களின் நன்மைக்காகவும், 10 மற்றும் +2 மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறவும், அனைத்து வகை தொழில்கள் மேன்மை பெறவும் வழிபாடு நடந்தது. உற்சவர் ராமர், லட்சுமணர், சீதை மற்றும் அனுமனுக்கு கவசம் அணிவித்து திரிசிதி மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனையும், 1001 முறை ராம நாம அர்ச்சனையும் நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து