மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 14:34 IST
துரவாயில் தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜஸ்வந்த். பானையில் 2.57 நிமிடங்கள் நின்று, இடுப்பில் வளையத்தை 300 முறை சுழற்றிக்கொண்டு, கையில் சதுரங்க கட்டைகளை சரி செய்தபடி, ஆசிரியர் கேட்ட கணக்குகளுக்கும் பதில்கள் சொல்லி, சாதனை படைத்தார். இதற்காக ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் அவரது பெயர் இடம் பெற்றது. மாணவனின் அப்பா ரவி, அம்மா காயத்ரி முன்னிலையில், ஜஸ்வந்திற்கு பள்ளி நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து