மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 15:21 IST
மதுரை பழங்காநத்தம் ரவுண்டான அருகில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் பழனிச்சாமிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக சட்ட விதிகளை மாற்றம் செய்ததை கண்டித்தும், பொது செயலாளர் பதவியை பெற முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பபட்டது. மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பழனிச்சாமிக்கு எதிராக கருப்பு பலூன் பறக்கவிட்டனர். கோபாலகிருஷ்ணன் பேசுகையில், எம்.ஜி.ஆர் ரத்தத்தை சிந்தி வளர்த்தது தான் அதிமுக என்றார்
வாசகர் கருத்து