மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 17:19 IST
சைவ தலங்களில் முதன்மை தலமாகவும் சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குவது திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில். பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி நடப்பதால், தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடக்கிறது. திருவாரூர் பெரிய தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராகும். 96 அடி உயரமும் 30 அடி நீள அகலமும் கொண்டது. நான்கு ராட்சச இரும்பு சக்கரங்களுடன் தேரின் எடை 220 டன்னாக உள்ளது. சக்கரங்களில் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பகுதியில் 33 அடி நீளம், 11 அடி உயரம் கொண்ட நான்கு மர குதிரைகள் வடிவமைக்கப்படும். அம்பாள், முருகர், விநாயகர், சண்டிகேஸ்வரர் என மற்ற நால்வருக்கும் தனித்தனி தேர் கட்டப்படுகிறது. 50 ஊழியர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து