மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 17:22 IST
தர்மபுரி மாவட்டம் நெல்லை நகரை சேர்ந்த ஐடி கம்பெனி ஊழியர் ராஜசேகர் வயது 32. இவர் ஒசூரில் தன்னுடன் வேலை, பார்க்கும் கீர்த்திவாசன் உள்ளிட்ட நண்பர்களுடன் திருச்சிக்கு சுற்றுலா வந்தார். முக்கொம்பு காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ராஜசேகரன் மற்றும் கீர்த்திவாசன் நீரில் மூழ்கினர். கீர்த்திவாசனை பொதுமக்கள் உயிருடன் மீட்டனர். ராஜசேகரை தேடி கிடைக்கவில்லை. திருச்சி தீயணைப்புதுறையினர் ராஜசேகர் உடலை மீட்டனர். ஜீயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து