மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 17:58 IST
சென்னை, திருமுல்லைவாயிலில் பால் வினியோக நிறுவனத்தை கார்த்திகேயன், மகாலஷ்மி, சுந்தரராஜன், மகேஷ்குமார், முத்துப்பாண்டி நடத்திவந்தனர். கால் நடை பண்ணை தொழிலில் முதலீடு செய்வதற்கான கவர்ச்சிகரமான அறிவிப்புகள் மூலம், பல முதலீட்டாளர்களை அவர்களது வலையில் விழ வைத்தனர். பின்னர், முறைகேடு செய்து சுமார் 5 கோடியே 75 லட்சம் பணத்தை ஏமாற்றினர். இது குறித்த வழக்கில் போலீசார் ஏற்கெனவே சுந்தரராஜன், மகேஷ்குமாரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த மற்ற மூன்று பேரில் கார்த்திகேயனை இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து