மாவட்ட செய்திகள் மார்ச் 22,2023 | 18:07 IST
தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராமச்சந்திரன் வயது 74. மார்ச் 10 ல் மனைவியுடன் விளாத்திகுளம் சென்றார். வீட்டில் அவரது அத்தை காமாட்சி வயது 98 மட்டும் தனியாக இருந்தார். வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர் பீரோவில் இருந்த 13 பவுன் நகையுடன் எஸ்கேப் ஆனார். ராமச்சந்திரன் வடபாகம் போலீஸ் ஸ்டேசனில் புகார் தெரிவித்தார். சிசிடிவி காட்சியில் தூத்துக்குடி முத்தம்மாள்காலனியை சேர்ந்த பரமசிவன் மகன் கருவேலமுத்து சங்கர் வயது 22 திருடியது தெரிந்தது. 2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான 13 பவுன் நகைகளை மீட்டனர். கருவேலமுத்துவை கைது செய்தனர்.
வாசகர் கருத்து