அரசியல் மார்ச் 23,2023 | 00:00 IST
பெரம்பலுார் காரை மலையப்ப நகர் திமுக கிளை செயலர் சிவகுமார். இவர் பாலக்கரை ரோட்டில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து அண்ணாமலை,ஸ்டாலின் போட்டோவுடன் பேனர் வைத்தார். அதில் நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த பிரதமருக்கு கோடானு கோடி நன்றிகள் என தெரிவித்து இருந்தார். பேனரால் பெரம்பலுார் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்டம் சிவகுமாரை கண்டித்ததால் சிறிது நேரத்தில் பேனர் அகற்றப்பட்டது.
வாசகர் கருத்து