மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 13:35 IST
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சோத்துப்பாறை அணை நீரை வெளியேற்றியதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான் காரணம் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனை வலியுறுத்தி பாமக சார்பில் குடீநீர் தட்டுப்பாடு ஏற்படுத்திய செயற்பொறியாளரை பாராட்டி மாலை அணிவிக்கும் போராட்டம் நடந்தது. செயற்பொறியாளர் சுகுமாரன் அலுவலக கதவிற்கு மாலை அணிவித்து குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
வாசகர் கருத்து