மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 14:52 IST
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கும்பகோணம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு சென்னை திரும்ப ரயில்வே ஸ்டேஷன் சென்றார். பிரதமர் மோடி குறித்த சர்ச்சை கருத்து மீதான அவதூறு வழக்கில் குஜராத் மாநிலம், சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது குறித்த தகவல் வெளியானது இதை கண்டித்து கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் அழகிரி தலைமையில் ரயில் மறியல் நடந்தது. சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து கட்சி நிர்வாகிகள் தீர்ப்பிற்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் 15 நிமிடம் ரயில் தாமதமாக சென்றது. அதே ரயிலில் அழகிரி சென்னை புறப்பட்டார். (ப்ரத்)
வாசகர் கருத்து