மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 00:00 IST
செய்யாறு பழனிவேல் தெருவை சேர்ந்த 15 பேர் அறுபடை முருகன் கோவிலுக்கு சுற்றுலா சென்றனர். அதிகாலை செய்யாருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். டிரைவர் தனவேந்தன் வேனை ஓட்டினார். செய்யாறு-வந்தவாசி சாலையில் குலமந்தை கிராமம் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த பனை மரத்தில் மோதியது. நரசிம்மன் என்பவர் அங்கேயே இறந்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். படுகாயம் அடைந்த 12 பேரை செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து