மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 16:17 IST
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி பெருமாள் கோவில் பட்டி. அரப்படிதேவன்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக திருமலாபுரம் ஊராட்சி நிர்வாகம் கிராமத்திற்கு குடிநீர் முறையாக வழங்கவில்லை. ஆண்டிபட்டி ஊராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பெருமாள் கோவில்பட்டி கிராமத்தினர் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கமிஷனர் மலர்விழி அறை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மலர்விழி கிராமத்தினரிடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். கிராமத்தினர் கலைந்து சென்றனர்.
வாசகர் கருத்து