மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 16:17 IST
போஸ்ட் ஆபீஸ் கணக்கு முக்கியம் என வதந்தி. திமுக தேர்தலின் போது பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசிக்கும் போது வரும் நிதியாண்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைதொகை வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் செப்டம்பர் 15 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்துள்ளதால் அதில் உரிமை தொகையை பெற்றுக்கொள்ளலாம் என ஆவலுடன் உள்ளனர்.
வாசகர் கருத்து