மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 00:00 IST
திருச்சி மாவட்டம், பாப்பாக் குறிச்சி காட்டூரில் போதை மாத்திரைகள், ஊசிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருவெறும்பூர், டிஎஸ்பி அறிவழகனின் தலைமையில் தனிப்படை ரோந்து பணியில் ஈடுபட்டது. ரமேஷ் வயது 36, ஸ்டீபன் ராஜ் வயது 22 இருவரும் மருத்துவத்திற்கு பயன்படும் போதை மாத்திரை மற்றும் ஊசிகளை விற்ற போது போலீசார் பிடித்தனர். திருவெறும்பூர் போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து