மாவட்ட செய்திகள் மார்ச் 23,2023 | 18:30 IST
தேனி மாவட்டம் வீரபாண்டி முத்துத்தேவன்பட்டியில்100 ஆண்டுகள் பழமையான வலம்புரி மஹாகணபதி கோயில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடந்தது. கடந்த 3 நாட்களாக யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடந்தது. கூடிஇருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலவர் வலம்புரி மஹா கணபதிக்கு பால், சந்தனம், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து