அரசியல் மார்ச் 24,2023 | 00:00 IST
பிரதமர் மோடியை திருடர்களுடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்பட்டது. காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் விமர்சித்தன. இதற்கு பாஜ முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதில் அளித்தார். ஒருவரை ஜாதி பெயரால் இழிவாக பேசுவது மிகப்பெரிய அவதூறு. அதற்கு தான் சூரத் கோர்ட் இந்த தண்டனையை அளித்தது. விசாரணையின் போது பல நீதிபதிகளை மாற்றியதாக கார்கே கூறியுள்ளார். நீதித்துறை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. கோர்ட் தங்கள் பாக்கெட்டில் இருக்க வேண்டும் என நினைக்கின்றனரா? நாட்டு மக்களை இழிவாக பேச ராகுலுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று விரும்புகின்றனரா? என ரவிசங்கர் கேட்டார்.
வாசகர் கருத்து