அரசியல் மார்ச் 24,2023 | 00:00 IST
தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் ஆன போது அதிமுக எம்எல்ஏக்கள், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. மனோஜ்பாண்டியன் மற்றும் அதிமுகவின் அருண்குமார், ரவி இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதற்கிடையே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தனக்கு கொலைமிரட்டல் விடுப்பதாக திருவல்லிக்கேணி போலீசில் ரவி புகார் அளித்தார். மிரட்டிய நபர்களின் செல்போன் எண்ணை சேகரித்து போலீஸ் விசாரிக்கிறது.
வாசகர் கருத்து