மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 00:00 IST
பொள்ளாச்சி அண்ணா நகர் பகுதி, கள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் பழமையான கருப்பராயன், கன்னிமார் கோவில் உள்ளது. மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர் இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் கோயிலுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், 7 நாட்களுக்குள் கோவிலை அகற்ற வேண்டும் இல்லையென்றால் நகராட்சி கோயிலை அப்புறப்படுத்தும் என தெரிவித்துள்ளது. இதனை கண்டித்து பூசாரி சந்திரன் கோவில் கருவறையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தை துவக்கினார். அவருக்கு ஆதரவாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் பஜனை பாடல்களை பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
வாசகர் கருத்து