மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 00:00 IST
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் 2011ல் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 3.5 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் கட்டப்பட்டது. நூலகம் திறக்கப்பட்ட 4 மாதங்களிலேயே நூலகம் மூடப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் நூலகத்தினை பயன்படுத்த முடியவில்லை. நூலக கட்டிடம் தற்போது ஊராட்சி தளவாட பொருட்கள் வைக்கப்படும் குடோனாகவும், இரவு நேரங்களில் மது பிரியர்கள் குடிக்கும் இடமாகவும் மாறியுள்ளது. அறிவை வளர்க்கும் நூலகம், மது அருந்தும் இடமாக மாறிவிட்டதால் அப்பகுதி மக்கள் வேதனை அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும், அரசும் விரைந்து நடவடிக்கை எடுத்து நூலகத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து