மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 12:11 IST
கோவை கோர்ட் வளாகத்திற்குள் சிவா என்பவர் அவரது மனைவி கவிதாவின் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு வேண்டும் என வக்கில்கள், ஊழியர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்உத்தரவின்படி இன்று கோவை கோர்ட்டின் 3 நுழைவாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தீவிர சோதனைக்கு பின்னரே அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
வாசகர் கருத்து