சிறப்பு தொகுப்புகள் மார்ச் 24,2023 | 12:45 IST
பல்சர் நேகட் ஸ்போர்ட்ஸ் எனும் பைக் வரிசையில் என்.எஸ் - 200 மற்றும் என்.எஸ் - 160 பைக்குகளை அப்டேட் செய்து உள்ளது பஜாஜ் நிறுவனம். என் எஸ் பைக்குகள் அறிமுகம் செய்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், 30 நாடுகளில் அதன் மவுசு இன்னும் குறையவில்லை. பைக்கின் டிஜிட்டல் அம்சங்களை மேம்படுத்தியுள்ளனர். டெலஸ்கோபிக் போர்க் சஸ்பென்ஷனுக்கு பதிலாக அப்சைட் டவுன் போர்க் சஸ்பென்ஷன பொருத்தி டூயல் சேனல் ஏ.பி.எஸ் பாதுகாப்பு அமைப்பு, இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் கியர் இன்டிகேஷன் வசதி, பெட்ரோல் அளவு வைத்து பைக் பயணிக்கும் தூரம் கணிப்பு, மைலேஜ் கணிப்பு உள்ளிட்ட வசதிகளுடன் பைக்கை களம் இறக்கி உள்ளனர்.
வாசகர் கருத்து