மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 16:14 IST
விருதுநகர் மாவட்டம் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கொள்முதல் விலையை உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்எல்ஏ ராமசாமி தலைமை வகித்தார். பசும்பால் 1 லிட்டருக்கு 42 ரூபாயும், எருமை பால் 1 லிட்டருக்கு 52 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும், கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்து தர வேண்டும், 50 சதவீத மானியத்தில் ஆவின் நிறுவனம் தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர் லிங்கம் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து