பொது மார்ச் 24,2023 | 16:59 IST
அரியலூர் மாவட்டம் வெள்ளூரில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. அங்கு ஆஞ்சநேயர் உள்பட 4 சிலைகள் காணாமல் போயின. இதுகுறித்து சிலை தடுப்பு பிரிவு போலீசார் 2012-ல் இருந்து விசாரிக்கின்றனர். இதில் ஆஞ்ச நேயர் சிலை ஆஸ்திரேலியாவில் வாழும் அமெரிக்கர் ஒருவரிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க மியூசியம் ஒன்றில் அதை அவர் ஏலம் எடுத்திருந்தார். சட்ட நடவடிக்கை மூலம் அந்த சிலை, ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டு டில்லி வந்தது.
வாசகர் கருத்து