மாவட்ட செய்திகள் மார்ச் 24,2023 | 20:55 IST
ன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரை சேர்தவர் லாரி டிரைவர் ராஜன். இவர் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளது. ஜனவரியில் அருள் பாபி கொலை வழக்கில் குளச்சல் போலீசார் ராஜனை கைது செய்து நாகர்கோவில் கிளை சிறையில் அடைத்தனர் இன்று இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து வந்தனர். ராஜன் இயற்கை உபாதைக்கு செல்ல வேண்டும் என்றதால் காவலர் சுகு சுந்தர் அனுமதித்தார். கழிப்பறைக்குள் சென்ற ராஜன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். தடுக்க சென்ற காவலர் சுகு சுந்தருக்கு கையில் காயம் ஏற்பட்டது
வாசகர் கருத்து