மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 11:16 IST
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ளது துதாங்கண்மாய். கண்மாயை நம்பி 200 ஏக்கர் விவசாயம் நடக்கிறது. விவசாய பணிகள் முடிந்ததையடுத்து மீன் பிடி திருவிழா நடந்தது. கண்மாயில் மீன் பிடிக்க சுற்றுவட்டார கிராம மக்கள் கட்சா, வலை, கூடையுடன் கிராம முக்கியஸ்தர்கள் கொடியசைத்ததும் உற்சாகமாக போட்டி போட்டு மீன்களை பிடித்தனர். கெண்டை, விரால், பாப்லட், ரோகு, கட்லா, ஜிலேபி மீன்கள் ஏராளமாக கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாசகர் கருத்து