மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 12:08 IST
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கீரமங்கலம் பேரூராட்சி 9வது வார்டில் கீரமங்கலம் செரியலூரை இணைக்கும் கிராமரோடு உள்ளது. 8.5 மீட்டர் அகலமுள்ள ரோடு 5 மீட்டராக சுருங்கியது. காணாமல் போன 3.5 மீட்டர் ரோட்டை கண்டுபிடித்து தர கீரமங்கலம் பேரூராட்சி 9 வது வார்டு இளைஞர்கள் ரோட்டின் அளவு ரசீதுடன் கீரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். திரைப்பட நடிகர் வடிவேலு கிணற்றை காணவில்லை என ரசீதுடன் சென்றது போல் ரசீதுடன் இளைஞர்கள் புகார் கொடுத்தனர்.
வாசகர் கருத்து