மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 14:27 IST
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை அட்டெண்டர் ரவிசங்கர் வயது 42. மனைவி ராஜலெட்சுமி மற்றும் சாய்வர்சன் என்ற 6 வயதில் மகன் உள்ளனர். இரண்டு வருடமாக தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி 6 லட்ச ரூபாய் இழந்தார். கடன் தொல்லையால் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. மனைவி ராஜலெட்சுமி தஞ்சை மாவட்டம் தச்சன்குறிச்சிக்கு தாய் வீட்டிற்கு சென்றார். தனியாக இருந்த ரவிசங்கர் இரவு தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டின் அருகில் இருந்தவர்கள் துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ரவிசங்கர் இறந்ததாக கூறினர். ரவிசங்கர் மனைவி ராஜலட்சுமி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து