மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 16:06 IST
கிருஷ்ணகிரி மாவட்டம், தர்கா என்ற இடத்தில், பெங்களூரில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் ஒரு டிப்பர் லாரி வந்தது. திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்தார். லாரி சாலை தடுப்பு கட்டைகளின் நடுவே வேகமாக சென்று, வாகன ஓட்டிகள் மீது மோதியது. இதில், இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. லாரி டிரைவருக்கு கால் முறிந்தது. மூன்று பேரும் ஓசூர் அரசு ஆபத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்
வாசகர் கருத்து