மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 17:44 IST
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஆசிரியர் தாக்கப்பட்டதை கண்டித்தும் பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிதம்பரநகர் பஸ்ஸ்டாண்ட் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோஷங்கள் எழுப்பபட்டது
வாசகர் கருத்து