மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 18:43 IST
புதுக்கோட்டை கீழ ஏழாவது தெருவில் புவனேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. கோயிலில் மாராமத்து பணிகள் நடக்கிறது. கோயில் பணியில் கிரேன் வாகனம் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்து கோயிலுக்கு பின்புறம் ராஜா குளம் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கிரேன் வாகனத்தில் ஹேண்ட் பிரேக் போடாததால் வாகனம் தானாக ஓடி பாத்திமா என்பவர் ஓட்டு வீட்டிற்குள் புகுந்தது. வீட்டிற்குள் பாத்திமாவின் மகன் அஸ்வின் சுதாரித்து வீட்டில் இருந்து வெளியே ஓடி தப்பினான். வீட்டின் ஒரு பகுதி இடிந்து வீட்டு உபயோக பொருட்கள் சேதமானது. கணேஷ் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து