சிறப்பு தொகுப்புகள் மார்ச் 25,2023 | 19:06 IST
சூப்பர்வைசருக்கு ரூ.10,000 அபராதம் குன்னூர், வண்டிசோலையில் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். அங்கு செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள வனப்பகுதியில், பேப்பர் கப்கள், காலி மது பாட்டிகள் வீசப்பட்டு இருந்தன. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக, மதுக்கடை மேற்பார்வையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடையையும் அதிகாரிகள் பூட்டி சென்றனர். கலெக்டருக்கு அறிக்கை அளித்த பின்னர் கடையை திறக்க அனுமதித்தனர்.
வாசகர் கருத்து