மாவட்ட செய்திகள் மார்ச் 25,2023 | 19:43 IST
தேனி மாவட்டத்தில் கேரளா லாட்டரி சீட்டு விற்பனையை தடுக்க கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டி தலைமையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். தமிழகம் வந்த கேரள அரசு பஸ்சை சோதனை செய்ததில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கேரள லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த சாந்தி, சின்னமனூரை சேர்ந்த முத்து இருவரும் விற்பதற்காக கொண்டு வந்தனர். 2 லட்சம் மதிப்புள்ள 4 ஆயிரத்து 500 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்
வாசகர் கருத்து