சிறப்பு தொகுப்புகள் மார்ச் 25,2023 | 21:43 IST
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். வயது 30. அம்மா பேரவை ஒன்றிய இணை செயலாளராக இருந்தார். இவர் மீது கொலை, கஞ்சா விற்பனை, அடிதடி தொடர்பான வழக்குகள் உள்ளன. வீட்டின் அருகே நண்பர்கள் 4 பேருடன் மது குடித்தார். மது காலியானதால், வாங்கி வரும்படி 2 பேரை அனுப்பினார். மற்ற 2 பேர் உடனிருந்தனர். மது வாங்க சென்றவர்கள் திரும்பிவந்து பார்த்தபோது, நாகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனிருந்த இருவரையும் காணவில்லை. போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போதையில் ஏற்பட்ட தகராறில் நாகராஜை சக நண்பர்கள் 2 பேரும் தீர்த்துக்கட்டி இருக்கலாம் என போலீசார் கருதினர். அவர்களை தேடும் பணி நடக்கிறது. அதே பகுதியை சேர்ந்த ரவுடி விஷ்வா மீதும் போலீசுக்கு சந்தேகம் உள்ளது. காரணம், மாமூல் வாங்கும் பணத்தை நாகராஜிடம் கொடுத்து வந்துள்ளார் விஷ்வா. அது தொடர்பாக 2 பேருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்தது. கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரே இந்த கொலையை செய்திருக்கலாம். கொலை கும்பலை பார்த்து மற்ற 2 நண்பர்களும் தெறித்து ஓடி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து