சிறப்பு தொகுப்புகள் மார்ச் 26,2023 | 08:10 IST
ஊழியர்கள் மீது தாக்குதல், பொருட்களை நொறுக்கினர் வேலூரில் கலெக்டர் அலுவலகம் அருகே சிறுவர்கள், இளம் சிறார்களுக்கான பாதுகாப்பு இல்லம் உள்ளது. 42 இளம் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவன் தம்மை வேறு இல்லத்திற்கு மாற்ற கூடாது என்று கூறி சுவற்றின்மீது ஏறி நின்று எதிர்ப்பு தெரிவித்தான். அவனை நெருங்கியவர்கள் மீது கற்கள் வீசி தாக்கினான். 4 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின் கீழே இறங்கி வந்தான். அப்போது மேலும் 10 பேர் அவனுடன் சேர்ந்து பாதுகாவலர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேஜை நாற்காளிகள், கேமரா உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். பாதுகாவலர்கள், ஊழியர்கள் அனைவரும் உயிர் பயத்தில் கேட்டிற்கு வெளியே ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாசகர் கருத்து