மாவட்ட செய்திகள் மார்ச் 26,2023 | 00:00 IST
நீலகிரி மாவட்டம், குன்னுார்- - மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள காட்டேரி பூங்காவில், கோடை சீசனுக்காக, 1.70 லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து நாடுகள் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் இருந்து 30 வகை மலர் விதைகள் பெறப்பட்டு, நாற்றுக்களாக உற்பத்தி செய்து, நடவு செய்யப்பட்டன. இதில் தற்போது, 'அமரல்லிஸ்' வகையை சேர்ந்த 'ஹிப்பியாஸ்ட்ரம்' மலர்கள் பூத்துள்ளன. இவற்றை சுற்றுலா பயணியர் வியப்புடன் ரசிக்கின்றனர்.
வாசகர் கருத்து