மாவட்ட செய்திகள் மார்ச் 26,2023 | 00:00 IST
உதகை மார்க்கெட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி கடந்த 18ம் தேதி பூச்சொறிதல் விழாவுடன் விழா வெகு துவங்கியது. அடுத்த மாதம் வரை ஒவ்வொரு சமுதாய மக்களின் உபயம் நடைபெறுவது வழக்கம். 5வது உபயமாக ஆயிர வைசிய நகரத்து செட்டியார் சங்கம் சார்பாக ஸ்ரீ முத்துப்பல்லக்கு அலங்காரத்தில் தேர் திருவீதி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்
வாசகர் கருத்து