மாவட்ட செய்திகள் மார்ச் 26,2023 | 00:00 IST
பெரம்பலுார் மாவட்டம், திருவச்சூரில் புகழ் பெற்ற மதுர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை கும்பாபிேஷகம் நடக்கிறது. கோவிலில் பிரதிஷ்டை செய்ய பிரமாண்டமான சுடுமண் சிற்பங்கள், பத்மஸ்ரீ விருது பெற்ற சுடுமண் கலைஞர் முனுசாமி தலைமையிலான குழுவினரின் கை வண்ணத்தில் உருவானது. வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டில் 25 அடி உயரமுள்ள பொன்னுசாமி, 23 அடி உயரமுள்ள செங்கமலை அய்யா, 21 அடி உயரமுள்ள பெரியசாமி, செல்லியம்மாள், பொன்னன் சடையார், ஆத்தடியார், கிணத்தடியார், லாட சன்னியாசி, பொன்னார், கொரபுலியான், நாக கன்னி, குதிரைகள், மாடுகள் உள்ளிட்ட கிராம தெய்வங்களின் சிற்பங்கள் உருவாக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக 100 டன் களிமண் கொண்டு சிற்பங்கள செய்யும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. களிமண்ணில் தயார் செய்யப்பட்டுள்ள சிற்பங்களை சூளையில் வைத்து சுடப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு, கோவிலில் பிரதிஷ்டை செய்ய லாரிகளில் திருவச்சூருக்கு எடுத்து செல்லப்பட்டது.
வாசகர் கருத்து