மாவட்ட செய்திகள் மார்ச் 26,2023 | 19:36 IST
நாட்டு நல பணி திட்டத்தின் கீழ் பூங்காவை சுத்தம் செய்தனர் கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நல பணி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் இன்று தாவரவியல் பூங்காவை சுத்தம் செய்தனர். தாவரவியல் பூங்காவில் சுற்றுலா வந்த பயணிகளும் மக்களும் போட்டு சென்ற பிளாஸ்டிக் பொருட்கள் கழிவுகள் மற்றும் குப்பைகள் போன்றவற்றை மாணவ மாணவிகள் சுத்தம் செய்தனர். தாவரவியல் பூங்காவில் தேவையில்லாமல் வளர்ந்திருக்கும் செடி கொடிகளை அகற்றினர்
வாசகர் கருத்து