மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 00:00 IST
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை வட்டக்கானல், வெள்ளகெவி பகுதிகளில் கனமழை பெய்தது. கும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியல் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பத்திரமாக வெளியேற்றினர். அருவியை கடக்க முடியாமல் தவித்த 30 பேரை வனப்பகுதியில் 5 கிலோமீட்டர் அழைத்து சென்று வனத்துறையினர் மீட்டனர். நீர் ஆர்ப்பரித்து செல்வதால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து