மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 00:00 IST
ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயில் 83 ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா தொடங்கியது. கோயில் கொடிமரத்தின் முன்பு சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது பத்துநாட்கள் நடக்கும் நிகழ்ச்சியில் இன்று சிறப்பு அலங்காரத்தில் முருகன், விநாயகர் அருள்பாலித்தனர். ராமநாதபுரம், ஆர்எஸ் மடைபட்டணம் காத்தான்பாரதி நகர், திருப்புல்லாணி, ஓம் சக்தி நகர், ராம்நகர் வழுதூர், வாலாந்தரவை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 5ம் தேதி பூக்குழி, பால்குடம் எடுக்கும் நிகழ்வுகள் வெகுவிமர்சையாக நடைபெறும்.
வாசகர் கருத்து