மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 00:00 IST
மதுரை மாவட்டம் மேலூர் திருவாதவூரை சேர்ந்தவர் ராஜா முகமது கறிக்கடை வைத்துள்ளார். இரவு மனைவி ரம்ஜான் மகள் ஹமீதியாவுடன் பள்ளிவாசல் சென்றபோது எதிரே டூவீலரில் வந்த நான்கு பேர் ராஜா முகமது டூவீலர் மீது மோதினர். மூவரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இரவு 1 மணியளவில் ராஜ வீட்டில் இல்லாத போது டூவீலரில் வந்த மர்மநபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பீர் பாட்டிலை ராஜா முகமது வீட்டினுள் தீவைத்து வீசினர். முன்பக்க கதவில் பட்டு கதவு ஸ்கிரீன் எரிந்தது. வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர். எஸ்பி சிவபிரசாத் நேரில் விசாரிக்கிறார்.
வாசகர் கருத்து