மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 13:47 IST
புதுச்சேரியை அடுத்த கனுவாப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். மங்களம் தொகுதி பாஜக பொறுப்பாளர். இவர் வில்லியனுாரில் உள்ள ஒரு ஸ்வீட் கடை அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த கும்பல் செந்தில்குமார் மீது வெடிகுண்டு வீசியது. நிலைகுலைந்த அவரை கத்தி, அரிவாளால் அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் செந்தில்குமார் அதே இடத்தில் இறந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து தப்பியது. கொல்லப்பட்ட செந்தில்குமார் அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளர். கொலை குறித்து வில்லியனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து