மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 15:10 IST
சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் இளம் குரல் அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு சிங்க பெண்ணே விருது வழங்கப்பட்டது. காவல் துறையில் சிறப்பாக பணி செய்த வில்லிவாக்கம் எஸ்ஐ அபர்னா, கல்வி பணியில் சிறப்பாக பணி செய்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரளா உள்ளிட்ட 25 பெண்களுக்கு சிங்கபெண்ணே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.. நிகழ்ச்சிக்கு திரைப்பட இயக்குனர் எஸ்.பி முத்துராமன், நடிகை ரேகா நாயர், சமூக சேவகர் கோபாலகிருஷ்ணன் மருத்துவ சேவகர் நரேஷ்குமார், சமூக ஆர்வலர் சௌந்தர பாண்டியன் ஆகியோர் விருது வழங்கி கௌரவித்தனர். நிகழ்ச்சியில் மாணவர் மாணவிகளின் கலை நிகழ்ச்சி, மகளிர்க்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
வாசகர் கருத்து