மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 17:37 IST
தமிழ்நாடு மகளீர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டத்துக்கு உட்பட்ட ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி இன்று நடந்தது. நிகழ்ச்சியில் திருப்பூர், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் இருந்து மகளிர் சுய உதவி குழுக்கள் கலந்து கொண்டனர். சிறு தானிய உணவு வகைகள், எள் உருண்டை சிறுதானிய பாயாசம் கடலை உருண்டை சத்துமாவு பாயாசம் காய்கறி சூப் போன்ற பல உணவு வகைகளை போட்டியில் காட்சிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வட்டார அளவிலான போட்டியிலும் அதில் வெற்றி பெறும் குழுவினர் மாவட்ட , மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கு பெறுவர்.
வாசகர் கருத்து