மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 18:21 IST
திருப்பூர் நொய்யல் கரையில் நீர் வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி பணிகளை மேற்கொண்டது. நொய்யல் கரையில் சாயப்பட்டறை பகுதியில் உள்ள 150 க்கும் மேற்பட்ட வீடுகளில் பெரும்பாலான வீடுகள் அகற்றப்பட்டன. மேலும் 17 வீடுகளை அகற்றுவதில் கால அவகாசம் வழங்கியும் எந்த பயனும் இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அலுவலர்கள் பொக்லைன் வாகனத்துடன் சென்றனர். அப்போது மக்கள் சிலர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணியைத் தடுத்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்குச் சென்ற ஊழியர்கள் , தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்திய பின் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்து அகற்றினர். ம் பணி துவங்கியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வாசகர் கருத்து