மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 18:38 IST
முல்லைப்பெரியாறு அணையின் மத்திய நீர்வள ஆணைய அணை பாதுகாப்பு அமைப்பின் தலைமை பொறியாளர் விஜய் சரண் தலைமையிலான குழுவினர் முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை மதகுகள், கேலரி, சுரங்கப் பகுதி, சீப்பேஜ் வாட்டர் பகுதிகளை ஆய்வு செய்தனர். கண்காணிப்பு குழு தலைவர் விஜய் சரண், செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக அரசின் பிரதிநிதிகளான நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரணியம், கேரள அரசு பிரதிநிதிகளான நீர்ப்பாசனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வேணு, நீர்ப்பாசனத் துறை நிர்வாக தலைமை பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் ஆய்வின் போது இருந்தனர்.
வாசகர் கருத்து