மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 19:10 IST
சென்னையில் மது அருந்தி வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. 7, 752 வழக்குகள் பைசல் செய்யப்படாமல் இருந்த நிலையில், வழக்காடிகளை அழைத்து, அபராதத்தை வசூலித்து வருகின்றனர். மார்ச் 23-ல் மட்டும் 775 வழக்குகள் மூலம் 80 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் வசூலித்தனர். கடந்த 2 மாதங்களில் மொத்தம் 7 ஆயிரத்து 286 வழக்குகள் பைசல் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் 7 கோடியே 53 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் அபராதமாக பெறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து