மாவட்ட செய்திகள் மார்ச் 27,2023 | 20:08 IST
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இலங்கைத் தமிழர் முகமது பாசில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான கொக்கைனை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 20 ம் தேதி பறிமுதல் செய்தனர். முகமது பாசில், முத்துகிருஷ்ணன், சேக்மைதீன், ஆதம் மாலிக் நான்கு பேரை கைது செய்து விசாரித்தனர். எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த அப்துல் ரஹ்மானை இன்று சென்னையில் கைது செய்தனர். தொடர்புடைய முக்கிய புள்ளிகளை போலீசார் தேடுகின்றனர்.
வாசகர் கருத்து