மாவட்ட செய்திகள் மார்ச் 28,2023 | 11:46 IST
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு கருநாக்கமுத்தம்பட்டி, சுருளிப்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டியில் 3000 ஏக்கரில் வாழை விவசாயம் நடக்கிறது. நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த மழையினால் கதிரேசன், பரமன், ஈஸ்வரன், அரசன் ஆகியோரின் நிலங்களில் 8,000 க்கும் மேற்பட்ட தார்கள் விளைந்த வாழை மரங்கள் சாய்ந்து சேதம் அடைந்தன. பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் நஷ்டமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து