சிறப்பு தொகுப்புகள் மார்ச் 28,2023 | 13:04 IST
இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள ஒப்பந்தப்பட்டியலில் கோஹ்லி, ரோகித் சர்மா, 'ஏ+' கிரேடில் நீடிக்கின்றனர். இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் வீரர்களுக்கான ஆண்டு சம்பள ஒப்பந்த பட்டியல் வெளியானது. இதில் ரூ. 7 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ள 'ஏ+' கிரேடில் கேப்டன் ரோகித் சர்மா, விராத் கோஹ்லி, பும்ரா நீடிக்கின்றனர். இவர்களுடன் சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ரூ. 5 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ள 'ஏ' கிரேடில் ரிஷாப் பன்ட், முகமது ஷமி, அஷ்வின், தங்களது இடத்தை தக்கவைத்துக் கொண்டனர். இவர்களுடன் 'ஆல்-ரவுண்டர்களான' அக்சர் படேல், ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்பட்டனர். சமீபகாலமாக 'பார்மின்றி' தவிக்கும் லோகேஷ் ராகுல், 'ஏ' கிரேடில் இருந்து, ரூ. ஒரு கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ள 'சி' கிரேடுக்கு தள்ளப்பட்டார். 'சி' கிரேடில் இருந்த சூர்யகுமார், சுப்மன் கில், ரூ. 3 கோடி கொண்ட 'பி' கிரேடுக்கு முன்னேறினார். 'பி' கிரேடில் இடம் பெற்றிருந்த ரகானே, இஷாந்த் சர்மா, ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். தவிர 'சி' கிரேடில் இடம் பிடித்திருந்த புவனேஷ்வர் குமார், மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, சகா, தீபக் சகார் ஆகியோரும் நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களுக்குப் பதில் இஷான் கிஷான், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பரத் ஆகியோர் 'சி' கிரேடில் சேர்க்கப்பட்டனர்.
வாசகர் கருத்து